உலகின் குள்ளமான மனிதர் காலமானார்

உலகின் குள்ளமான மனிதர் சந்திரா பகதூர் டாங்கி தனது 75வது வயதில் காலமானார்.

shotest man
நேபாளத்தை பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா பகதூர் கடந்த 2012ம் ஆண்டு உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்டார்.  இவரது  உயரம் வெறும் 54.61cm (21.5 inch) மட்டுமே.

இவரது மறைவையொட்டி கின்னஸ் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளதுடன் இவரது சாதனை எப்பவுமே தனித்துவமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.