உலகின் அதிக பருமனுடைய மனிதர் காலமானார்

இதுவரை உலகின் அதிகூடிய பருமனுடைய மனிதராக இருந்த மெக்சிகோவைச் சேர்ந்த 38 வயதுடைய அன்டிரேஸ் மொரினொ (Andres Morino) மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

andresஇவரது எடை சுமார் 450Kg ஆக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடற்பருமனைக் குறைக்க செய்துகொண்ட அறுவை சிகிச்சை மூலம், உடல் எடையை 320Kg ஆக குறைத்துக்கொண்டார்.

அதன் பின்னர் பூரண சுகத்துடன் காணப்பட்ட இவர், நத்தார் தினத்தன்று திடீரென ஏற்பட்ட  மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.