இருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சில நிமிடங்கள் வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள், இருவேறு வருடங்களில் பிறந்த தினத்தை கொண்டாடப் போகிறார்கள்.

ny babies

லூயிஸ் – மரிபெல் தம்பதியினர் இரட்டைக்குழந்தைகளின் பிறப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆச்சரியமாக வருட இறுதி நாளான 31ம் திகதி இரவு 11:59 மணிக்கு இரட்டை குழந்தைகளில் ஒன்றான  பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மூன்று நிமிட இடைவெளியில், அதாவது முதலாம் திகதி (01/01/16) அதிகாலை 12:02க்கு ஆண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தைக்கு ஜேலின் எனவும்,  மகனுக்கு லூயிஸ் எனவும் பெயரிட்டுள்ளது லூயிஸ் – மரிபெல்  தம்பதி. தனது பெயரையே மகனுக்கும் வைத்துள்ள லூயிஸ்,  “இதை புத்தாண்டு எங்களுக்குக் கொடுத்த பரிசாக நினைக்கிறோம். என் வாழ்க்கையிலேயே இது மிகவும் மகிழ்ச்சியான நாள்” என்று பூரித்தார்.