மீண்டும் இணையும் கபாலி கூட்டணி

“கபாலி” படம் மாபெரும் வெற்றி என்பது யாவரும் அறிந்ததே. அதே கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்படி இருக்கும்? ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பா.ரஞ்சித் மீண்டும் இயக்குகிறார்.

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான ‘2.0’ ல் நடித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை தயாரிப்பது வேறு யாருமல்ல, தலைவரின் மருமகனான தனுஷ்தான். இத்தகவலை தனுஷ் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் “காக்கா முட்டை”, “விசாரணை”, “நானும் ரௌடிதான்”,  “அம்மா கணக்கு” உட்பட பல மிக நல்ல படங்களை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.