400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடும் கபாலி.

பத்து நாட்களில் 400 கோடிகளுக்கு மேலான வசூலுடன் வெற்றி நடை போடுகிறது கபாலி திரைப்படம். 400 கோடிகளைத் தொடும் முதலாவது தமிழ்ப்படம் கபாலிதான்.

Kabali 7a

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோரின் நடிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான கபாலி படம், கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக வெற்றி நடை போடுகிறது.

Kabali 2

இந்தியாவில் அதிக வசூலைப் பெற்ற படங்களைப் பார்க்கும்போது, ஆமிர்கானின் “பி.கே” (2014) 792 கோடிகளுடனும் , சல்மான் கானின் “பஜ்ராங்கி பைஜான்” (2015) 626 கோடிகளுடனும், ராஜ மௌலியின் இயக்கத்தில் வெளியான “பாகுபலி” (2015) 600 கோடிகளுடனும் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

Kabali 1
கபாலி முதல் மூன்று இடங்களுக்குள் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் மகிழ்ச்சியுடன்.