எரிமலைக்கடியில் தங்கம் மற்றும் வெள்ளி

Volcano

நியூசிலாந்தின் வடக்கு தீவுகளில், புவியியல் ஆராய்சியாளர்கள் எரிமலைக்கு அடியிலுள்ள நீர்த்தேக்கங்களில் பெருமளவிலான தங்கம் மற்றும் வெள்ளி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக இவற்றை வெளியில் எடுப்பது கடினம். இவற்றை வெளியில் எடுக்கமுடியுமாயின், வருடத்திற்கு  $3.5 மில்லியன் வரையிலான பெறுமதியுடைய  தங்கமும், $3.6 மில்லியன் வரையிலான பெறுமதியுடைய வெள்ளியும் கிடைக்கும்.