உலக சாதனை படைத்த கிறிஸ்மஸ் மரம்

123

அவுஸ்திரேலியாவின் தலை நகரான கன்பராவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உலகில் அதிகூடிய எண்ணிக்கையான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தை அமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

christmas tree22 மீட்டர் உயரமுடைய இம்மரமானது, அதிகூடிய எண்ணிக்கையான 518,838 LED மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான டேவிட் ரிச்சர்ட் எனும் சட்டத்தரணியே இச் சாதனைக்கு சொந்தக்காரர்.

christmas tree

இதற்கு முன்னர் , ஜப்பான் நாட்டிலுள்ள யுனிவேர்சல் ஸ்டுடியோஸ் 364,200 மின்விளக்குகளால் அமைத்த கிறிஸ்மஸ் மரமே தொடர்ச்சியாக 5 வருடங்கள் உலக சாதனையாக இருந்தது.