ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஓதுங்கிய அதிசய கடல்வாழ் உயிரினம்

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் எனும் இடத்திலுள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் அரியவகை கடல் உயிரினம் ஓன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது  Final Fantasy எனும்  video gameல் வரும் ஒரு உருவத்தை ஒத்ததாகக் கானப்படுகிறது.

Blue Dragon

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகில் அரிய கடல் உயிரினமான Glaucus Aflanticus எனும் இவ் உயிரினம் பொதுவாக Blue Dragon எனவும் அழைக்கபடுகின்றது. இவ் உயிரினம் தென் ஆபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கடற்பரப்புகளில் இதற்கு முன்னரும் தோன்றியுள்ளது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள இந்த Blue Dragonஐ தொடுவதை தவிர்த்துக்கொள்ளும்படி உயிரியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.