விக்ரமுக்கு விருது இல்லை. அதிருப்தியில் தமிழ் திரை உலகம்.

Html code here! Replace this with any non empty text and that's it.

63rd National award63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்படுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது “ஐ” படத்தில் தன் உடலை வருத்தி, மூன்று விதமான தோற்றத்தில் நடித்த நடிகர் விக்ரமுக்கு கிடைக்குமென அணைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருது அவருக்கு கிடைக்காமல் போனது பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் திரையுலகினர் பலர் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரPC Sriramபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் வலைத்தளத்தினூடாக இவ்வாறு
No award for vikram (kenny), sorry the nation awards many times misses its point. Its not vikrams loss, its loss to the national awards.” பதிவு செய்துள்ளார்.

விசாரணை படத்திற்காக சிறந்த Samuthirakaniதுணை நடிகருக்கான தேசிய விருது வென்ற இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் தனது மனவருத்தத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார் “ ‘ஐ’ படத்துக்காக விக்ரமுக்கும் தேசிய விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்த்தேன். அந்த படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்தளவுக்கு மிகப்பெரியது.”

Vivekநகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இது பற்றி தனது ட்விட்டர் வலைத்தளத்தில்,
நண்பா விக்ரம்,”ஐ” காக உடலை பெருக்கினாய்; பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்; உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது! ” என்று குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படி இருப்பினும், விருதுகள் கிடைக்காவிடினும், விக்ரம் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

63rd National awardTo see the “I” movie stills, click here